165
பொலனறுவையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று அதிகாலை இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்கின்றனா்.
Spread the love