153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பௌத்த மதத்திற்கும், பௌத்த பிக்குகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக சரத் பொன்சேகா மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 9ம் சரத்தின் அடிப்படையில் சரத் பொன்சேகாவை பதவி விலக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகாவை பதவி நீக்கும் போராட்டத்திற்கு மக்களை இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லே குணவன்ச தேரரை சந்தித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love