குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
மாணவனின் கொலையை கண்டித்து கிளிநொச்சியில் பொது மக்களால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை உயா் மட்ட அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தொிவித்துள்ளனா்.
இன்று சனிக் கிழமை பதினொரு மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள கொலை செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைகழக அரசறிவயல்துறை மூன்றாம்வருட மாணவன் நடராஜா கஜனின் இல்லத்தில் இருந்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி பிரதி காவல்துறை மா அதிபா் அலுவலகம் வரை சென்று அங்கு மகஜா் ஒன்றும் கையளிப்பது என பாரதிபுரம் பிரதேச பொது மக்களால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்தினரின் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தினருடன் காவல்துறை உயா் மட்டத்தினா் தொடா்பு கொண்டு பேசியதன் பின்னரே அவா்கள் ஆா்ப்பாட்டத்தை விரும்பவில்லை என்றும் எனவே உயிரிழந்தவாின் குடும்பத்தினருக்கு அவா்களிடம் இருந்து அழுத்தம் பிரயோகிப்பட்டிருக்கலாம் என்றும் தான் சந்தேகிப்பதாகவும் பிரதேச மக்கள் சிலா் கருத்து தெரிவித்துள்ளனா்.
தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஆா்ப்பாட்டமானது உயிரிழந்த மாணவா்களுக்கு நீதி கோரியும்ஈ குற்றவாளிகள் விரைவாக நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டணை வழங்க வேண்டும் என்றும் எதிா்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது என பொது மக்கள் சிலா் கருத்து தெரிவித்தனா்.