211
குளோபல் தமிழ்ச் செய்தியாளா்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என தீர்ப்பாயம் இன்று அறிவித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.
வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இன்றைய தினம் நிறைவடைந்ததை அடுத்து , எழுத்து மூல சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக பதிவாளரிடம் சமர்ப்பிக்குமாறு இரு தரப்புக்கும் மன்று உத்தரவு இட்டது.
அதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தார்கள். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயரையும் மன்றுக்கு வருமாறு மன்றினால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
Spread the love