குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இர்மா புயல் காற்றினால் இதுவரையில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புளொரிடா வைத்தியசாலை ஒன்றில் ஐந்து பேர் புயல் காற்றின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். புயல் காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால், சிகிச்சை அளிக்க முடியாது நோயாளிகள்; உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் புயல் காற்று காரணமாக சுமார் நான்கு மில்லியன் பேர் வரையில் மின்சார வசதியின்றி அவதியுறுகின்றனர்.
அமெரிக்காவின் புளொரிடா மற்றும் அண்டைய மாநிலங்களில் புயல் காற்று காரணமாக சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இர்மா புயல் காற்று அமெரிக்காவை தாக்க முன்னதாக கரீபியன் தீவுகளை மோசமாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.