Home இலங்கைவலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை இறந்த காலத்திற்கானதல்ல :

வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை இறந்த காலத்திற்கானதல்ல :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலிந்து  காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது சம்பந்தமாக இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது இறந்த காலத்திற்கானதல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.    குறித்த சட்டமானது எதிர்காலத்திற்கு மட்டுமே செல்லுபடியானது என்றும், அது இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் பின்னரே செல்லுபடியாகும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக, இடம்பெற்ற இறுதி யுத்தகாலத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தோ, அல்லது 1983களிற்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தோ, இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  சர்வதேச உடன்படிக்கையானது ஆதிகம் செலுத்தாது என்பதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிசெய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More