குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அந்நாட்டின் பிராந்தியமொன்றின் மேயர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். செல்வச் செழிப்பு மிக்க பிராந்தியமாக கருதப்படும் காடாலன் ( Catalan ) பிராந்திய மேயர்களே இவ்வாறு எதிர்ப்பைவெளியிட்டுள்ளனர். காடாலன் சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எனினும் இவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்பெய்ன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டு காடாலன் பிராந்தியத்தைச் சேர்ந்த 700 மேயர்கள், ஸ்பெய்னின் பார்சிலோனாவில் கூடி தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். காடாலன் பிராந்தியத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி, சுயாட்சி அதிகாரங்களை நிர்ணயம் செய்வது குறித்த வாக்கெடுப்பினை நடாத்த பிராந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்த தீர்மானத்திற்கு ஸ்பெய்னின் மத்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், நீதிமன்றமும் இதனை எதிர்த்துள்ளது.