பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என்று செய்திகள் வந்த போதிலும், தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நேற்றையதினம் வெள்ளை மாளிகை பிரதிநிதி ஒருவரை சந்தித்த அதிகாரிகள், 2015 பருவநிலை ஒப்பந்தத்தை தொடர்ந்து அமெரிக்கா கடைபிடிக்கலாம் அல்லது இது தொடர்பாக தங்களின் அணுகுமுறையை மாற்றலாம் என்று தெரிவித்திருந்தனர்.
எனினும் இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தங்கள் நாட்டுக்கு சாதகமான வகையில் விதிமுறைகள் இல்லாத வரை, இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் சேர முடியாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு உரிய நியாயமான பங்கு வேண்டும் என்று தான்விரும்புவதாக கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.