குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவிற்கு எதிரான போட்டித் தடை தற்காலகமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை சாமர சில்வா உள்ளிட்ட சில வீரர்கள் உள்நாட்டு போட்டிகளில் விளையாட முடியும் என தெரிவித்துள்ளது.
கழக மட்டத்திலான பி பிரிவு போட்டியொன்றில் ஆட்ட நிர்ணய சதியில் பங்கேற்றதாகக் குற்றம் சுமத்தி சாமர சில்வாவிற்கு இரண்டாண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 37 வயதான சாமர சில்வா இலங்கை அணியின் சார்பில் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 75 ஓருநாள் சர்வதேச போட்டிகளிலும், 16 டுவன்ரி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு போட்டித் தடை
Sep 17, 2017 @ 03:15
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதியில் பங்கேற்றதாகக் குற்றம் சுமத்தி இரண்டாண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கழக மட்டத்திலான பி பிரிவு போட்டியொன்றில் இவ்வாறு ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாணந்துறை கழகத்தின் தலைவரான சமார சில்வா மற்றும் களுத்துறை கழகத்தின் தலைவர் மனோஜ் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான சாமர சில்வா இலங்கை அணியின் சார்பில் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 75 ஓருநாள் சர்வதேச போட்டிகளிலும், 16 டுவன்ரி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கழக மட்ட அணிகளின் புள்ளிப் பட்டியலில் மாற்றம் செய்யும் நோக்கில் களுத்துறை அணி வேண்டுமென்றே போட்டியில் தோல்வியைத் தழுவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீண்ட விசாரணைகளின் பின்னர் அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் ஓராண்டு கால போட்டித் தடையும், அணித் தலைவர்களுக்கு இரண்டாண்டு கால போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.