குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நியூயோர்க்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடுவதனை எதிர்த்து இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக ஜனாதிபதி பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.