சமஷ்டிக்கு பதிலாக மாற்றுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஐh தெரிவித்துள்ளார். குறித்த மாற்றுத்திட்டத்தினை ஏற்பதா இல்லையா என்பது குறித்து, எதிர்வரும் 21ஆம் திகதி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கி, வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் தாயகமாக மாற்றவேண்டுமென தெரிவித்துள்ளார்.