Home இலங்கைபுதல்வரை அரசியலில் ஈடுபடுத்தும் திட்டங்கள் எதுவும் கிடையாது – சந்திரிக்கா

புதல்வரை அரசியலில் ஈடுபடுத்தும் திட்டங்கள் எதுவும் கிடையாது – சந்திரிக்கா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதல்வரை அரசியலில் ஈடுபடுத்தும் திட்டங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்  தெரிவித்துள்ளார்.

தமது புதல்வரை அரசியலில் ஈடுபடுத்த தாம் விரும்புவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது புதல்வரையோ அல்லது புதல்வியையோ அரசியலில் களமிறக்கும் எண்ணமில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை தாம் தெரிவு செய்ய முடியாது எனவும் அதனை மக்களே தெரிவு செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More