குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 72ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்கா பயணம் செய்ய சரத் பொன்சேகா வீசா கோரியிருந்தார். எனினும், தமக்கு அமெரிக்கா வீசா வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிலர் செய்த யுத்தக் குற்றச் செயல்களினால் ஒட்டுமொத்த இராணுவத்திற்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்து இராணுவத்தின் நற்பெயரை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.