பெங்களு}ரில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் எழுத்தாளர் விக்ரம் சம்பத்; என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 55 வயதான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 5ம் திகதி பெங்களுரில்; இனம் தெரியாத நபரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்ற நிலையில் கவுரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ், பிரபல ரவுடி குனிகல் கிரி உள்ளிட்டோரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் கவுரி லங்கேஷூடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பெங்களு}ரைச் சேர்ந்த எழுத்தாளர் விக்ரம் சம்பத்திடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் போது கவுரி லங்கேஷின் கொலை தொடர்பாகவும், இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்பாகவும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கவுரி லங்கேஷ் கொலை நடந்தபோது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும் வழக்கமான நடைமுறைக்காக காவல்துறையினர் தன்னை விசாரணைக்கு அழைத்தனர் எனவும் இது இது சரியான அணுகுமுறை இல்லை எனவும் சம்பத் தெரிவித்துள்ளார்.
எனினும் சட்டத்தை மதித்து நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்ததாகவும் கவுரி லங்கேஷ் தன்னை பற்றி மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரை பற்றியும் அவரது பத்திரிகையில் எழுதி வந்தார் எனவும் தன்னை விசாரணைக்குட்படுத்தியதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.