குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லிணக்கம், ஜனநாயக சுதந்திரத்தை உறுதி செய்தல், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் அரசாங்கம் பாரியளவில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடும்போக்குவாதிகள் குறுக்கு வழியில் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். துரித கதியில் குறுக்கு வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நடைமுறைச்சாத்;தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீடித்து நிலைக்கக்கூடிய நிரந்தர நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கத்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், ஜனநயாகத்தை நிலைநாட்டுதல் ஆகியன தொடர்பான முதல் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.