காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகள் என அரசாங்கம் காட்டியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறித்த திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர பிரஜைகளாகவே அரசாங்கம் கருதுகின்றதெனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளர்h.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி இரண்டு அமைச்சுக்களை மத்திரமே நிர்வகிக்க முடியும். எனினும், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு என்ற மூன்றாவது அமைச்சுப் பொறுப்பையும் ஏற்று காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதனை யார் வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தலாமென சுட்டிக்காட்டியுள்ள அவர் அவ்வாறு நிகழும் சந்தர்ப்பத்தில், குறித்த சட்டமூலம் வலுவிழந்து, ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
1 comment
தர்மம் என்பான் நீதி என்பான் தரம் என்பான் சரித்திரத்து சான்று சொல்வான் , தாயன்பு பெட்டகத்தை சந்தியிலே வீசி விட்டு தன்மான வீரன் என்பான் , மர்மாய் சதி புரிவான் , வாய் பேச்சால் அவலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பான் , கர்ம வினை என்பான் , கடவுள் மேல் குற்றம் என்பான் , அடே காக்கைவன்னியனே காட்டி கொடுப்பானே,
இதைத்தானேடா சொன்னான் பட்டுக்கோக்கட்டை கல்யாணம் சுந்தரம் திண்ணை பேச்சு வீர்ர்களிடம் கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி என்று, அடே காக்கை வன்னியா காட்டி கொடுப்பானே தலைவர் பிரபாகரன் இருந்தவரை தமிழர்கள் முதல் தர பிரஜைகளடா , காட்டிக் கொடுப்பானும் காக்கைவன்னியனும் என்று தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்த புறப்பட்டாங்களோ அன்றே தமிழினம் நான் காம் தர பிரஜைகள் ஆகிவிட்டது என்பது உண்மை , ராஜன்.