பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அதனை நீட்டிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 24ம் திகதி பரோலில் விடப்பட்டிருந்தார். இந்தநிலையில் பேரறிவாளன் வருகையால் அவரது தந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பேரறிவாளனின் பரோலை நீடிப்பது குறித்து அரசு பரிசீலனை:-
பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் எதிர்வரும் 24ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அதனை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் விடுத்த கோரிக்கை குறித்து வருகின்றதென சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 24ம் திகதி பரோலில் விடப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் பேரறிவாளன் வருகையால் அவரது தந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.