Home உலகம்மரியா புயலால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

மரியா புயலால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

by admin

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ள நிலையில்  இந்த புயலினால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 25ஆக உயர்வடைந்துள்ளது.   மரியா புயலானது கரீபியன் தீவு நாடான டொமினிகாவை,   தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பலர் வீடுகளை இழுந்துள்ளனர்.

இந்தநிலையில் டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று   மணிக்கு, 205 கி.மீ, வேகத்தில் தாக்கியது.  இதனால்  மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் அங்குள்ள    அணை நிரம்பியுள்ளதால், அப்பகுதியில் உள்ள 70 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கரீபியன் தீவுகளில் இதுவரை இல்லாத சேதத்தினை ஏற்படுத்தியுள்ள மரியா புயலுக்கு 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More