Home உலகம்வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன:-

வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன:-

by admin

படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க ஜனாதிபதி பல ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறார் என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் முரட்டுத்தனமான நடவடிக்கையை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த போர் விமானங்கள் எடுத்துக் காட்டுவதாக பென்டகன் கூறியுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்ற நிலையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகின்றது.

அமெரிக்கா தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால், வட கொரியாவை முற்றிலும் அழித்துவிடும் என கடந்த செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வடகொரிய பிரதிநிதியும் சனிக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ள நிலையில் வடகொரியாவுக்கு நெருக்கமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More