குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஒபாமா கெயார் திட்டத்தை ரத்து செய்வதில், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அரசாங்கம் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது. ட்ராம்ப் அரசாங்கம் இந்த சட்டத்தை ரத்து செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.
எனினும், ஒபாமா கெயார் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலீடாக புதிய காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகம் செய்வதில் ட்ராம்ப் அரசாங்கம் சில சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. பதிலீடாக முன்வைக்கப்பட உள்ள புதிய யோசனைக்கு இரண்டு செனட்டர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
புதிய சட்டத்திற்கு அனைத்து செனட்டர்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது. டராம்பின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக சில செனட்டர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.