இலங்கை

பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பதில் காவல்துறை மா அதிபராக சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச காவல்துறை மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சீனாவிற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.

இதனால் பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவவித்துள்ளது. காவல்துறை மா அதிபர் எதிர்வரும் 30ம் திகதி நாடு திரும்ப உள்ளார். எதிர்வரும் 30ம் திகதி வரையில் பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன கடமையாற்ற உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply