குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி எதிர்பாராத வெற்றிகளை பெற்ற சில மணிநேரத்தி;ற்குள் கட்சி பிளவினை சந்தித்துள்ளது. புகலிடக்கோரி;க்கையாளர்கள் மற்றும் அகதிகளை தீவிரமாக நிராகரிக்கும் ஏஎவ்டி கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் கட்சிக்குள் உள்ள ஓரளவு மிதவாத போக்கை கொண்டவர்களின் முகாமை சேர்ந்தவருமான வுரோக் பெட்ரி ஆட்சி புரிவதற்கான தெளிவான திட்டமற்ற அராஜகவாத கட்சியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறிச்சென்றுள்ளார். ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் நான் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படமாட்டேன் தனித்து சுயேச்சையாக செயற்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது கட்சி ஜனாதிபதி மேர்கல் உருவாக்க முயலும் கூட்டணியில் இணையவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.