Home இலங்கைதென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:-

தென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:-

by admin

யாழ்.தென்மராட்சி கொருடாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று வாளினால் வெட்டி, கொட்டங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

கொருடாவிலை சேர்ந்த துரைராஜா ரஜீவ் (வயது 35) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால் , படுகாயமடைந்த நிலையில் அவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

கூலி வேலை செய்து வரும் குறித்த நபர்  இன்று  திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அருகில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு ஒன்று வாளினால் வெட்டி , கொட்டன்களால் தாக்கி உள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர், அபய குரல் எழுப்ப அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More