இன்று மதியம் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் குறித்த விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த விசேட அமர்வில் மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதன்படி மாநகர சபை கட்டளைச் சட்டம், நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேசசபை கட்டளைச் சட்டம் என்பவை இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மேலும் மூன்று சட்டமூலங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒக்டோபர் மாதம் 09ம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.