குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது நாட்டில் பாதுகாப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இலங்கையில் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகம் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அரசாங்கம் அமெரிக்காவின் தேவைக்கு அமைய படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை யுத்தமாக கூட வெடிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எமது நாடும் இந்த யுத்தத்தில் சிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.