குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியானதும் முக்கியமானதுமான தருணத்தை கடந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகள் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சவால் மிக்க காலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியான துறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் 21ம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடிய கல்வி முறைமை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் இதன் ஓர் கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.