Home உலகம்கியூப தூதரகத்தில் பணியாற்றி வரும் அமெரிக்க உத்தியோகத்தர்கள் பலர் மீள அழைப்பு

கியூப தூதரகத்தில் பணியாற்றி வரும் அமெரிக்க உத்தியோகத்தர்கள் பலர் மீள அழைப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கியூப தூதரகத்தில் பணியாற்றி வரும் அமெரிக்க உத்தியோகத்தர்கள் பலர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். மர்மமான முறையில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக அரைவாசிக்கும் மேற்பட்ட ராஜதந்திரிகள் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் காரணமாக பல உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கியூபாவிற்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மர்ம ஒலியைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இரண்டு கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More