குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் மருத்துவ தேவைகள் பூர்த்திய செய்யப்படுவதில்லை என மருத்துவ அறக்கட்டளை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கிரேக்கத்தில் சுமார் 60, 000 புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் குடிப்பெயர்வாளர்கள் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர்.
இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு போதியளவு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. டொக்ரேஸ் ஒப் த வேல்ட் (Doctors of the World )என்ற மருத்துவ அறக்கட்டளை நடத்திய ஆய்வின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
நோய்களினால் பாதிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கிரேக்க அரசாங்கம் மிகவும் குறைந்தளவு மருத்துவ வசதிகளையே செய்து கொடுப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் முற்று முழுதாகவே மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட உரிய வகையில் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.