158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைகழகம் முன்பாக காலை 10 மணிதொடக்கம் 11 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் உறவினர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பல்கலைகழக மாணவர் ஒன்றியம் , பல்கலைகழக கல்வி சார் மற்றும் சாரா ஊழியர் சங்கம் , மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love