குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார்.
உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கவிழ்வதற்கான வாய்ப்புகளும் புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஓன்று ஆட்சிக்குவந்தால் அது எவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் பிரித்தானியா வெளியேறுவது ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.