Home உலகம்ஒரே பெயரைக் கொண்ட இருவர் மேயர் பதவிக்காக போட்டி

ஒரே பெயரைக் கொண்ட இருவர் மேயர் பதவிக்காக போட்டி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒரே பெயரைக் கொண்ட இருவர் மேயர் பதவிக்காக போட்டிக்காக போட்டியிடும் சந்தர்ப்பம் ஒன்று  கனடாவின் மொன்றியலில் இடம்பெற்றுள்ளது . மொன்றியல் லெஸ் இபோல்மென்ற்ஸ் ( Les Eboulements   ) இன் மேயர் பதவி வேட்பாளர் பதவிக்காக போட்டியிடும் இருவரும் ஒரே பெயரைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் தேர்தலில்    (Pierre Tremblay )  மேயராக தெரிவு செய்யப்பட உள்ளார் எனினும், இதில் எந்த  பியர் ட்ரம்ப்லே     வெற்றியீட்டுவார் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். பியர் ட்ரம்ப்லே   என்ற பெயரைக் கொண்ட இருவர் மேயர் பதவிக்காக போட்டியிடுகின்றனர் என்கின்ற போதிலும் இரண்டு வேட்பாளர்களும் வேறுவேறு  கொள்கைகளுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேயராக கடமையாற்றும் பியர் ட்ரம்ப்லேக்கும் மற்றுமொரு பியர் ட்ரம்ப்லே க்கும் இடையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More