178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கோப் குழுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் சுனில் ஹந்துனெத்தி வெளிநடப்புச் செய்துள்ளார். பொது முயற்சியான்மை தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவான கோப் குழுவின் இன்றைய அமர்வுகளின் போது உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இடைநடுவில் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி வெளியேறிச் சென்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கோப் குழு அறிக்கையை மாற்றியமைக்க அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்தே அவர் இவ்வாறு வெளிநடப்புச் செய்துள்ளார்.
Spread the love