எந்தவொரு அரசாங்க சுற்று நிருபமும் மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு அல்லது வினைத்திறன் மிக்கதாக முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக அமையக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தொழில் சார்ந்த சேவையின் வினைத்திறன் மற்றும் முறைமைப்படுத்தலுக்கு ஏதேனும் சுற்று நிருபம் தடையாக இருக்குமானால் அதனை உடனடியாக கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதபதி குறிப்பிட்டார்.
இன்று பொலன்னறுவையில் இடம்பெற் உலக தபால் தின 143 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தபால் சேவையில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி எந்தவொரு தொழில் சார் பிரச்சினைக்கும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
143 ஆவது உலக தபால் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தபால் சேவை ஊழியர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டன.