Home இந்தியாதீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவத்தினர் பலி!

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவத்தினர் பலி!

by admin

இந்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிக் சூட்டில் இரண்டு இந்திய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் இந்திய  இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது  தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்றை அடையாளம் கண்டு அதனை தாக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.

இதன்போது இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத் தரப்பு கூறுகின்றது. அத்துடன் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More