இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு :

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அவர்களது உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.

தமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக உரிய முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என,   அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளித்த போதும், அதனை நிறைவேற்றாமையை கண்டிப்பதாகவும், இதில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன்  வடக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்த்தால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply