குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மகளிர் உரிமை தொடர்பான விவகாரங்களில் பிரித்தானியா கடந்த பத்தாண்டுகளில் எவ்வித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பதை காண்பிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் மகளிர் உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை காண்பிக்கும் புள்ளவிபர அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை இந்த விடயத்தில் பிரித்தானியா பல ஐரோப்பிய ஓன்றிய நாடுகளை விட பின்தங்கியுள்ளதை புலப்படுத்தியுள்ளது. பெண்களின் கல்வி வருமானம் அரசியல் ஈடுபாடு சுகாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்து குறிப்பிட்ட ஆய்வில் ஆராயப்பட்டுள்ளது.
பெண்கள் கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் பிரித்தானியா பின்தங்கியுள்ளதாக குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. மகளிர் சமத்துவம் குறித்த விடயத்தில் ஐரோப்பிய ஓன்றியத்தில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழில்விடயத்தில் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் இந்த இடைவெளி அதிகமாக காணப்படுகின்றது 40 வீதமான பெண்கள் மாத்திரமே முழு நேரம் தொழில்புரிகின்றனர். இதற்குமாறாக 50வீதத்திற்கு அதிகமான ஆண்கள் முழுநேரம் பணி புரிகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.