Home இலங்கைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – பசில் ராஜபக்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – பசில் ராஜபக்ச

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை விடவும் தற்போது மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் பொதுவான ஓர் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More