குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முஸ்லிம் விடுமுறை தினம் அறிவிக்கப்பட வேண்டுமென ஜெர்மனியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சுமார் 4.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் அதிகமானவர்கள் துருக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் அன்ஜலா மோர்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி மைஸீரே ( de Maiziere ) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முஸ்லிம் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரியுள்ளார். எனினும் இந்தக் கோரிக்கையானது ஆளும் கூட்டணி கட்சிக்குள் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையில் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தியுள்ளது.