விளையாட்டு

இலங்கை அணியினர் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை கிரிக்கட் அணியினர் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கட் போட்டித் தொடரின்  ருவன்ரி20 போட்டித் தொடரின் மூன்றாம் போட்டி லாகூரில் நடைபெறவுள்ளது.

எனினும் லாகூரில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கை அணியினர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணி வீரர்களை இணக்கப்படுத்தி லாகூர் போட்டியில் பங்கேற்கச் செய்ய ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் முயற்சித்து வருகின்றது.

எனினும் அணியின் வீரர்கள் பாதுகாப்பு காரணிகளுக்காக இந்தப் போட்டியில் பங்கேற்பதனை விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு இலங்கை அணியினர் பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர்கள் பயணம் செய்த பேருந்து  மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers