குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரசல்ஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்றும் சில மணிநேரத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவருடனான பேச்சுவார்த்தைகளின்போது பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எந்த வித விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள மாட்டார் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் சில வாரங்களிற்கு முன்னர் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்களையே பிரதமர் மீண்டும் வலியுறுத்துவார் என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நிதியை பிரித்தானியா எவ்வாறு வழங்கப்போகின்றது என்பதை தெரிவிக்கவேண்டும் என ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பிரித்தானியா இதனை தெளிவுபடுத்தினாலே அடுத்த கட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.