குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரதமரிற்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இறுதிநேரத்திலேயே தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜீன் குளோட் ஜங்கருடனான தெரேசா மேயின் சந்திப்பு இடம்nறுமா என தெரியாத நிலை காணப்பட்டதாக ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாகவே இவ்வாறானதொரு சந்திப்பு தங்கள் நிகழ்ச்சிநிரலில் காணப்பட்டது எனவும் ஆனால் திகதியை தீர்மானிப்பது கடினமானதாக காணப்பட்டது எனவும் ஐரோப்பிய ஓன்றிய பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு முடிவை காண்பதற்கான இறுதி நேர முயற்சியாக இந்த சந்திப்பு நிகழவில்லை என பிரதமரின் அலுவலக பேச்சாளா ஓருவர் தெரிவித்துள்ளார்.