குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி உதயநகா் மேற்கு கிராமத்தில் பெறுமதிமிக்க பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டு தனியாh் காணியில் மைதானம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியின் உரிமையாளர் 2009 க்கு பின்னர் நாட்டில் இல்லாமையினால் காணி பராமரிப்பு இன்றி காணப்பட்டுள்ளது. குறித்த காணியில் தென்னைகள், உள்ளிட்ட பல பெறுமதிமிக்க பயன்தரு மரங்கள் காணப்பட்டுள்ளன.
இந்த நிலைணில் குறித்த காணியை பிரதேச விளையாட்டுக் கழகத்திற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்புக்கள் இணைந்து வழங்கியதாக தெரிவித்து குறித்த காணியின் மூன்று ஏக்கர் நிலத்தில் உள்ள 40 க்கு மேற்பட்ட பயன்தரு தென்னைகள், தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்கள் கனரக வாகனங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் தேங்காய் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில் வளர்ந்த பயன்தரு தென்னைகள் 40 மேல் வெட்டப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.