158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தித் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்து முயற்சிக்கப்படுவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சில அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அபிவிருத்திக்கு உதவியளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாத்தன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உரிய வகையில் சேவையாற்றுவதே அனைவரினதும் முக்கியமான கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love