Home இலங்கைவாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல :

வாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல என அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு சடுதியாக உயர்வடைந்து செல்வதாகவும் வாழ்க்கைச் செலவினை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிதுள்ளார்.

சதொச நிறுவனத்தின் ஊடாக விற்பனையின் ஊடாக மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சதொச நிறுவனத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது எனவும் வேறும் காத்திரமான பொறிமுறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More