ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் இந்’திய ராணுவத்தினர் மேற்கொண்ட என்கவுண்டரிலகுறித்த பகுதியில் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனையடுத்து, தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.