இரண்டு நாள உத்தியோகபூர் பயணமாக இன்று பங்களாதேஸ் செல்லும் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ரோஹிங்கியா அகதிகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேசுக்கு சென்றுள்ளனர். அத்துடன் இந்தியாவில அகதிகளாக இருக்கும் ரோஹிங்கியாக்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்த போதும் உச்சநீதிமன்றில் இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதனால் அந்த விடயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பங்களாதேஸ் செல்லும் சுஷ்மாவின் பயணத்திட்டத்தில் ரோஹிங்கியா பிரச்சனை முக்கிய இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் அங்கு இருக்கும் சுஷ்மா வணிகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட சில விவாகரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது