குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாருக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. ரோஹினிய முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை கண்டித்து இவ்வாறு இராணுவ உதவிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளினால் அவர்கள் அண்டை நாடான பங்களாதேஸில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மில்லியன் ரோஹினிய முஸ்லிம்கள் பங்களாதேஸில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பங்களாதேஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார். அயுததாரிகள் மீதே தாக்குதல் நடத்துவதாகவும் சிவிலியன்களை தாக்கவில்லை எனவும் மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், சிவிலியன்கள் தாக்கப்படுவதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.