பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி கடந்த 18 வருட காலமாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுதடது வைக்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் திருகோணமலை நீதிமன்றத்தில் இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பின்னர் விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
குறித்த அரசியல் கைதியின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது