குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊடகங்கள் தம்மை துரத்தி துரத்தி தாக்குவதாகவும் ஊடகங்கள் தம்மை கடுமையாக தாக்கி வருவதாகவும், இவ்வளவு தாக்குவதற்கு எந்தவொரு ஜனாதிபதியும் இடமளிக்கவில்லை என சில ஊடகவியலாளர்கள் கருதக் கூடுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘மேலே பாய்ந்து பாயந்து அடிக்கின்றார்கள், திருப்பி திருப்பி அடிக்கின்றார்கள், கீழே வீழ்த்தி எழுப்பி தாக்குகின்றார்கள்’ என தெரிவித்துள்ளார்.
தம்மை தாக்குவதற்கு இடமளித்த ஓரேயொரு ஜனாதிபதி தாமே என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான ஓர் முதுகெலும்பு இருந்திருந்தால், இந்த வீரம் இருந்திருந்தால் எவ்வளவு நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.