அவுஸ்திரேலிய துணை பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce ) இரட்டை குடியுரிமை வைத்திருந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்ற நிலையில் நியூசிலாந்து குடியுரிமை வைத்துள்ள அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஜோய்சுடன் சேர்த்து 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்து வந்த அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஜோய்ஸ் உள்ளிட்ட மூவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய 4 பேர் ஏற்கனவே பதவி விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.